தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.
பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள். சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு ரகசிய திருமணம் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே கொஞ்சம் கேப் கிடைத்துவிட்டால் வெளிநாடுகளுக்கு வெகேஷன் சென்று குடும்பத்தினரோடு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருப்பார். இதனிடையே அவ்வப்போது பேட்டிகளில் கலகலப்பாக பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பதில் சொல்லுவார்.
இதனிடையே இவர் பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பாக்னானி என்பவரை சில ஆண்டுகள் ரகசியமாக காதலித்து வந்தார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பே தங்களது திருமணம் பற்றி அறிவித்திருந்தார் ரகுல் ப்ரீத் சிங்.
இந்நிலையில் இந்த ஜோடியின் திருமணம் கோவாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இத்திருமணத்தில் பாலிவுட் திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. யுபிஎஸ்சி சர்வீஸ் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக யுபிஎஸ்சி…
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
This website uses cookies.