அத மட்டும் என்னால் கன்ட்ரோல் பண்ணமுடியாது… சமந்தாவிடம் கூச்சமே இல்லாமல் கூறிய ரகுல் ப்ரீத் சிங்!

Author: Shree
14 September 2023, 4:36 pm

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள். சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு ரகசிய திருமணம் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே கொஞ்சம் கேப் கிடைத்துவிட்டால் வெளிநாடுகளுக்கு வெகேஷன் சென்று குடும்பத்தினரோடு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருப்பார். இதனிடையே அவ்வப்போது பேட்டிகளில் கலகலப்பாக பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பதில் சொல்லுவார்.

அந்த வகையில் சமந்தாவின் நிகழ்ச்சி ஒன்றில், ” உங்கள் முன் பல வகையான உணவுகளை வைத்து அதில் எதை அதிகம் விரும்பி சாப்பிடுவீர்கள் என்று சமந்தா கேட்டதற்கு, நான் சாப்பாடு விஷயத்தில் மட்டும் நீங்கள் நினைப்பது போல் இல்லை. எல்லா வகையான உணவையும் ஒரு ஸ்பூன் ஆவது சாப்பிட்டு ருசி பார்ப்பேன். அந்த விஷயத்தை மட்டும் என்னால் கண்ட்ரோல் செய்யவே முடியாது என கூச்சமில்லாமல் ஓப்பனாகவே கூறிவிட்டார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…