ஆணுறை பயன்படுத்துவது அவசியம்… பெண்கள் அந்த விஷயத்தில் மோசம் – கூச்சமின்றி கூறிய ரகுல் ப்ரீத் சிங்!

Author: Shree
15 November 2023, 11:37 am

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.

rakul preet singh -updatenews360

பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள். சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு ரகசிய திருமணம் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே கொஞ்சம் கேப் கிடைத்துவிட்டால் வெளிநாடுகளுக்கு வெகேஷன் சென்று குடும்பத்தினரோடு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருப்பார். இதனிடையே அவ்வப்போது பேட்டிகளில் கலகலப்பாக பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பதில் சொல்லுவார்.

rakul preet singh -updatenews360

அந்தவகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் உடலுறவு குறித்தும் அதன் விழிப்புணர்வு குறித்தும் பேசிய நடிகை ரகுல் ப்ரீத் சிங், பாதுகாப்பான உறவுக்கொள்ள அவசியம் ஆணுறை தேவை. அதை பயன்படுத்துவதிலோ அல்லது வாங்குவதிலோ கூச்சம் இருக்க கூடாது. பொதுவாக இந்த விஷயத்தில் ஆண்களை பெண்கள் தான் இன்னும் விழிப்புணர்வாக இருக்கவேணும். பெண்கள் ஆணுறை விஷயத்தில் கூச்சப்படக்கூடாது. அப்படி இல்லை என்றால் பெண்ணுறை வாங்கி சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என ரகுல் ப்ரீத் சிங் மிகவும் ஓப்பனாக பேசியிருந்தார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…