ரிலீஸுக்கு முன்பே விஜய்யின் ‘வாரிசு’ படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் நடிகர் – அவரது ரியாக்ஷன் என்ன தெரியுமா?

Author: Vignesh
3 January 2023, 3:48 pm

தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.

இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், சங்கீதா, சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என ஒரு பிரபல நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய்.

வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான தெலுங்கு படங்களை போல இப்படமும் குடும்பத்தை சுற்றிய எமோஷ்னல் கதைக்களம் இருப்பதாக கூறப்படுகிறது, ரசிகர்களும் படத்தை காண தான் ஆவலாக உள்ளனர்.

ram charan -updatenews360

இந்நிலையில், தயாரிப்பாளர் தில் ராஜுவின் அலுவலகத்தில் அண்மையில் தெலுங்கு சினிமா நடிகர் ராம் சரண் விஜய்யின் வாரிசு படத்தை பார்த்துவிட்டு படம் சூப்பராக இருக்கிறது என மனதார புகழ்ந்துள்ளாராம். மேலும் படம் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ளதாகவும் பாராட்டியுள்ளார் ராம் சரண் என்பது குறிப்பிடத்தக்கது

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ