நட்சத்திர குழந்தையை பார்த்துக்கொள்ளும் ஆயாவிற்கு இத்தனை லட்சம் சம்பளமா? புலம்பும் VIP கூட்டம்!

Author: Rajesh
7 February 2024, 6:31 pm

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவின் மகனான ராம் சரண் 2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படமே நல்ல அறிமுகமாக அமைந்து 50 நாட்களை கடந்து ஓடியது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் நந்தி சிறப்பு நடுவர் விருதுகளை ராம் சரண் வென்றார்.

அதன் பிறகு மாவீரன் திரைப்படம் கைகொடுத்தது. கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்திருந்தார். இவர் 2011 ஆம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தனர். வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்த பின் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்த அந்த தம்பதிகள் ஆர்ஆர்ஆர் வெற்றிக்கு பிறகு மனைவி உபாசனா காமினேனி கர்ப்பமாக இருப்பதாக ராம் சரண் குடும்பம் அறிவித்தது. அதையடுத்து அவருக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு விழா நடைபெற்றது.

கடந்த ஜூன் 20 அன்று ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பெண்குழந்தை பெற்றெடுத்தார். இதையடுத்து ஒட்டுமொத்த குடும்பமும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. பின்னர் ராம் சரண் மகளுக்கு பெயர் சூட்டுவிழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக முகேஷ் சிம்பனி தனது மனைவி நீடா அம்பானியுடன் கலந்துக்கொண்டு ராம் சரண் மகளுக்கு தங்க தொட்டில் பரிசாக கொடுத்தார்கள். 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட தொட்டில் விலை மட்டும் ரூ.1 கோடி என்று செய்தி வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தற்ப்போது ஒரு ஷாக்கிங் தகவல் கிடைத்துள்ளது. அதாவது, ராம்சரணின் மகள் “க்ளின் காரா கோனிடெலா”வை பார்த்துக்கொள்ளும் சாவித்ரி என்ற பணிப்பெண்ணிற்கு மாதம் ரூ. 5 லட்சம் சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். இவர் இதற்கு முன்னர் கரீனா கபூர் உள்ளிட்ட நட்சத்திரங்களின் குழந்தையை பராமரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் சம்பளத்தொகையை கேட்டு ஆடிப்போன வேலையில்லா பட்டதாரிகள் நம்மளும் பேசாமல் இது போன்ற ஆயா வேலைக்கே போய்டலாம் போல என புலம்பித்தள்ளியுள்ளனர்.

  • Ajith Kumar Team Racing Challenges துபாய் ரேஸில் பல திக் திக் சவால்ககளை எதிர்கொள்ள போகும் அஜித் குழுவினர்… 24 மணி நேரம் எப்படிங்க..!
  • Views: - 289

    0

    0