கேம் சேஞ்சர் தோல்வி: ராம் சரணின் நெகிழ்ச்சி செயல்…மகிழ்ச்சியில் தில் ராஜு..!

Author: Selvan
20 January 2025, 12:57 pm

மீண்டும் தில் ராஜு தயாரிப்பில் நடிக்கும் ராம் சரண்

இந்த வருட பொங்கல் பண்டிகையையொட்டி ஷங்கர் இயக்கத்தில்,தில் ராஜு தயாரிப்பில்,ராம் சரண் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவானா கேம் சேஞ்சர் திரைப்படம்,பான் இந்திய அளவில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம்,விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது.இதனால் படக்குழு சோகத்தில் மூழ்கியது.

Ram Charan supports producer

அதுமட்டுமில்லாமல் படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜுவுக்கு கேம் சேஞ்சர் தோல்வியால் பெரும் நஷ்டத்தை சந்தித்தார்.இந்த நிலையில் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள ராம் சரண் கேம் சேஞ்சர் படத்தின் நஷ்டத்தை ஈடு செய்ய தில் ராஜு தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்க: இளையராஜானு ஒருத்தன் இருக்கான்.. மிஷ்கின் பேச்சால் வெடித்த சர்ச்சை!

மேலும் இப்படத்தில் நடிக்க அவர் வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட மிக குறைந்த தொகையை பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.ராம் சரணின் இந்த செயலால் தெலுங்கு சினிமா பிரபலங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.விரைவில் இப்படத்தின் இயக்குனர்கள் மற்றும் பிற நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

  • Dragon Movie Release in OTT Date Announced வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!