ரஜினிக்கு கண்டிப்பா அது வேணும்.. இல்லனா ரொம்ப கஷ்டம்..சர்ச்சையை கிளப்பிய பிரபல இயக்குனர்.!

Author: Selvan
12 February 2025, 2:02 pm

ரஜினி நடிகரே இல்லை..!

ரஜினி ஒரு நல்ல நடிகரா என்று என்னிடம் கேட்டால் என்னால் அவர் நல்ல நடிகர் என்று சொல்ல முடியாது என பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா பேசியிருப்பது,பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க: கமல் கேரவனுக்குள் முக்கிய புள்ளிகள்… கண்ணை கவரும் சொகுசு வசதிகள்..!

தெலுங்கு,தமிழ்,ஹிந்தி போன்ற மொழிகளில் பல படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா,ஆனால் சமீப காலமாக இவருடைய படங்கள் ஏதும் பெரிதாக ஜொலிக்கவில்லை,இருந்தாலும் சமீபத்தில் அவருடைய சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் பெரும் விவாத பொருளாக மாறி வருகிறது.

Ram Gopal Varma controversy

இந்த நிலையில் ஒரு நேர்காணல் ஒன்றில் ரஜினிகாந்த் நடிப்பை பற்றி பகிரங்கமாக பேசியுள்ளார்,அதில் நடிகருக்கும் ஸ்டார் நடிகருக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது,நடிப்பு என்பது கதாபாத்திரத்தை சார்ந்தது,ஆனால் ஸ்டார் நடிகர் நடிப்பது வெறும் பெர்ஃபாமன்ஸ் மட்டுமே,ரஜினி ஒரு நல்ல நடிகரா என்று கேட்டால், நான் அதை ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

அவர் நடிக்கின்ற படங்களில் பாதி படங்களுக்கு மேல் நடந்து வந்தால் கூட நீங்கள் பார்ப்பீர்கள்,ஸ்லோ மோஷன் காட்சிகள் இல்லாமல் ரஜினியால் நடிக்கவே முடியாது, கடவுள் மாதிரி பார்க்கும் ஸ்டார் நடிகர்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிக்க முடிவதில்லை,அவர்களை திரையில் ரசிகர்களும் சாதாரண நடிகராக பார்க்க விரும்பவில்லை,அதனால் தான் ஸ்டார் நடிகர்கள் எல்லோரும் நடிகர்கள் என்று என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.ராம் கோபால் வர்மாவின் இந்த பேச்சால் ரஜினி ரசிகர்கள் கடும் கோவத்தில் உள்ளனர்.

  • கேரளா செல்லும் கும்பமேளா மோனாலிசா…பறந்து வந்த அழைப்பால் குஷியில் வீடியோ.!
  • Leave a Reply