கணவரை உசுப்பேற்றி 4 தியேட்டர்களை வாங்கிய பிரபல நடிகை… கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!
Author: Vignesh27 July 2023, 11:30 am
ரஜினி, கமலுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் இருந்தாலும் ஒரு காலத்தில் இவர்களுக்கு போட்டியாக ஒரு நடிகர் இருந்துள்ளார் என்பதை அனைவராலும் நம்பமுடியாத உண்மை. அவருடைய போதாத காலம் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார் என்பது குறிப்பிடத்த்க்கது.

இல்லையென்றால் தற்போது ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் இடங்களில் கண்டிப்பாக அவரும் ஒரு நடிகர் இடம்பெற்றிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த காலகட்டத்தில் இவரைப் பார்த்து டாப் முன்னணி நடிகர்களே பயந்து நடுங்குவார்களாம். அந்த நடிகரின் படத்திற்கு போட்டியாக இவர்களது படம் வெளியிட்டால் கண்டிப்பாக தோல்வி நிச்சயம் தான்.

அந்த அளவுக்கு அவரின் ரசிகர்களின் பேர் ஆதரவை நடிகர் பெற்றவர் வேறு யாரும் இல்லை ராமராஜன் தான். இவரது நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, காவல்காரன் போன்ற பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து பட்டிதொட்டி எங்கும் இவரது பாடல்கள் பட்டையை கிளப்பியது. முன்னணி நடிகர்களை ஒப்பிடும்போது இவரது படங்கள் தான் அந்த காலத்தில் அதிக ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நளினி கொடுத்த பேட்டி ஒன்றில், சுவாரசியமான ஒரு தகவலை பகிர்ந்து உள்ளார். அதாவது, ராமராஜன் இரவு 2 மணிக்கு வீட்டுக்கு வந்தாலும் ரச சாதம் தான் விரும்பி சாப்பிடுவார் என்றும், ரசத்தோடு அப்பளம் பூ, ஆம்லெட் தான் அவருக்கு மிகவும் பிடித்தமான உணவு என்றும், திருமணம் முடிந்து முதன்முதலில் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தை தான் பார்த்ததாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், அந்த படத்தில் ராமராஜர் முழுக்க முழுக்க சட்டை இல்லாமல் தான் நடித்திருப்பார் அதனால், திரையில் அவரை பார்க்கும்போது வெட்கப்பட்டுக் கொண்டே தான் பார்த்ததாகவும் தெரிவித்திருக்கிறார். வெறும் கூரையில் இருக்கும் தியேட்டரை பார்த்து ராமராஜன் எப்படியாவது ஒரு தியேட்டரை வாங்க வேண்டும் என்று கூறுவார் எனவும், அப்படி அவரை நாலு தியேட்டர் வாங்க உசுப்பேற்ற உசுப்பேற்றி நளினி வாங்க வைத்ததாகவும் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.