‘செண்பகமே’ பாடல் நடிகையா இது? 54 வயதிலும் செம கிளாமராக எடுத்த போட்டோஷூட்..!
Author: Vignesh5 July 2024, 7:07 pm
பானுப்பிரியாவின் தங்கை என்ற அடையாளத்துடன் 1987 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிஷாந்தி. பின்னர், அதே ஆண்டில் நடிகர் ராமராஜன் நாயகனாக நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
இந்த படத்தில், இடம்பெற்ற செண்பகமே செண்பகமே மற்றும் மதுர மரிக்கொழுந்து வாசம் போன்ற பாடல்கள் மூலம் நிஷாந்தி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அதன் பின்னர், தென்னிந்திய மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தியதால் இவர் குறைவான தமிழ் படங்களில் நடித்திருந்தார். 1992 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் சித்தார்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார்.
இவருக்கு, இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு நிஷாந்தின் கணவர் திடீரென உயிரிழந்தார். 54 வயதாகும் நிஷாந்தி இளம் நடிகனுக்கே டஃப் கொடுக்கும் வகையில், நிறைய விதவிதமான போட்டோக்களை எடுத்து வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.