சிரிச்சு சிரிச்சு பேசி 4 கோடிய ஏமாத்திட்டா.. ரம்பாவை வம்பிழுத்த பிரபல தயாரிப்பாளர்..!
Author: Vignesh11 July 2023, 5:45 pm
ஜோதிகா கொடிக்கட்டி பறந்த காலக்கட்டத்தில் பல படங்களில் நடித்து வந்தார். அவருக்கு நடிகை ரம்பா டஃப் கொடுக்கும் விதத்தில் இருந்தவர். அப்போது தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்த ரம்பா சகோதரரை வைத்து 3 ரோசஸ் என்ற படத்தினை தயாரித்து அந்த படத்தில் ஜோதிகா, ரம்பா, லைலா இணைந்து நடித்து இருந்தனர்.
பின்னர் பைனான்சியரிடமிருந்து கடன் வாங்கி அந்த படத்தினை தயாரித்த ரம்பா, படத்தை முடிக்க 3 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிய நிலையில், அதற்கு காரணம் 2002 ஆம் ஆண்டு ஜோதிகாவுக்கும் லைலாவுக்கும் இடையில் சண்டை வந்து ஷூட்டிங்கிற்கு வராமல் இழுத்தடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குறித்த நாளில் படத்தினை முடிக்காமல் போக, அதையெல்லாம் சரி செய்து ரம்பா படத்தை முடித்து ரிலீஸ் செய்து இருக்கிறார். ஆனால் படமும் சரியாக ஓடாமல் மோசமான நஷ்டத்தை ரம்பாவிற்கு கொடுத்து கடனாளியானார்.
அப்போது இருந்து ரம்பா தமிழில் தலையே காட்டாமல் வேறு மொழிகளில் நடித்தும் 2010ல் திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டிலாகி இருக்கிறார்.
இது குறித்து பேசி பிரபல தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் ரம்பா தன்னிடம், 4 கோடிக்கு மேல் பணம் வாங்கியதாகவும், பணம் வாங்கும் பொழுது சிரித்து சிரித்து பேசி தன்னிடம் இருந்து பணத்தை வாங்கிவிட்டு 3.5 ஐந்து கோடி தருகிறேன் என்று ரம்பாவின் சகோதரர் கூறியதாகவும், அதன் பின்னர் அதை தராமல் ஏமாற்றியதாகவும், தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த சமயத்தில் ரம்பா மீடியாவை அழைத்து பிஆர்ஓ நெல்லை சுந்தரம் ஒட்டுமொத்த மீடியாவை அழைத்ததால் நடிகையின் பக்கம் சென்ற மீடியாவினர் தான்தான் ஏதோ தப்பு செய்த மாதிரி எல்லோரும் பேசியதாகவும், அது அப்போது நடந்தது என்றும், தான் பப்ளிசிட்டிக்காக இப்படி கூறவில்லை தான் யாரையும் கூப்பிட்டு பேசறது கிடையாது என்றும், தனக்குத்தான் அவ பணம் தரணும், நான் கொடுத்துட்டேன் ரம்பாவுக்கு எழுதி வைத்து தான் காசு கொடுத்தேன். கேஸ் போட்டேன் அப்படியே போயிருச்சு அந்த பணம் என்று மாணிக்கம் நாராயண வருத்தத்துடன் தற்போது பேசி வருவது குறிப்பிடத்தக்கது.