ரொம்ப அசிங்கப்பட்டேன்… அருணாச்சலம் படத்தில் ரஜினி செய்தது…. நடிகை ரம்பா வேதனை!

Author:
1 September 2024, 8:47 am

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ரம்பா நான் அருணாச்சலம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்துக் கொண்டிருந்தபோது அவர் என்னுடைய பின்னால் தட்டிவிட்டார் என கூறிய விஷயம் சமூக வலைதளங்களில் பரவி மிக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான செய்தியாக வெளியாகி பலரும் ரோல் செய்ய ஆரம்பித்தனர். இந்த நிலையில் தற்போது இச்சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கமாக கூறுங்கள் என ரம்பாவிடம் கேட்டதற்கு…

Rambha

அருணாச்சலம் படத்தின் படப்பிடிப்பின் போது லைட் ஆஃப் பண்ணிட்டு நடிகர் ரஜினிகாந்த் என்னுடைய முதுகில் தட்டினார் என்று தான் நான் சொல்லியிருந்தேன். ஆனால், அதை ரஜினிகாந்த் லைட் ஆப் பண்ணிட்டு ரம்பா பின்னாடி தட்டி விட்டார் என்று தப்பான நோக்கத்தில் திரித்து நெட்டிசன்ஸ் சோசியல் மீடியாக்களில் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இதே விஷயத்தை அந்த படம் வெளியான போது கூட நான் பேட்டி ஒன்றில் கூறியிருந்தேன். ஆனால் அப்போதைய ரசிகர்கள் இதை காமெடியாக மட்டுமே எடுத்துக் கொண்டு சிரித்தார்கள். ஆனால் இப்போது இளைஞர்களிடம் அதிகப்படியான நெகட்டிவிட்டி பெருகிவிட்டது. தப்பான கண்ணோட்டத்துடன் எல்லாத்தையுமே பார்க்கிறாங்க.

Arunachalam

அவங்க போட்ட கமெண்ட்ஸ்களை பார்த்து எனக்கே ரொம்ப கஷ்டமாயிருச்சு கொஞ்சமாவது வளருங்க அப்படின்னு தான் சொல்ல தோணுது என ரம்பா மிகுந்த வேதனையோடு பேசினார்.

மேலும் இந்த விவகாரம் ரஜினி சாருக்கு தெரிந்திருக்குமான்னு தெரியல? அப்படியே தெரிந்தாலும் அவர் இதையெல்லாம் பெருசா எடுத்துக்கொள்ளவே மாட்டார். அவருக்கு நான் எப்படி பேசினேன் என்பது நன்றாக தெரியும் சோசியல் மீடியாவில் உள்ளவர்கள் இதனை ஊதி பெரிதாகி விட்டனர் என ரம்பா மிகுந்த வேதனையுடன் கூறினார்.

  • Vijay Wish Good Bad ugly Teaser GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!