ரம்பாவுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டி தூக்கிய சிம்ரன்… படமும் மாஸ் ஹிட்டாம்..!
Author: Vignesh25 December 2023, 11:45 am
‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்பா. இதன்பின் ‘செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார்.
நடிகை ரம்பாவிற்கு கடந்த 2010ஆம் ஆண்டு இந்திர குமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதனிடையே அடிக்கடி தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். நடிகை ரம்பா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய நிலையில் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறாராம்.
மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள ரம்பா சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் சிம்ரன் நடிப்பில் வெளியான வாலி படத்தில் ஹீரோயினாக நடிக்க இருந்தாராம். நடிகை சிம்ரன் ரோலில் நடிக்க எஸ் ஜே சூர்யா தன்னை அணுகியதாகவும், கதையில் தனக்கு சில குழப்பங்கள் இருந்தால் அதில், நடிக்க மறுத்து விட்டதாக ரம்பா கூறி இருக்கிறார்.
மேலும், நடிகை ஜோதிகாவிடமும் எஸ் ஜே சூர்யா சிம்ரன் ரோளுக்கு நடிக்க கேட்டிருந்தார். ஆனால், ஜோதிகாவுக்கு பாலிவுட் படத்தின் வாய்ப்பு கிடைக்க அதில் நடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். எஸ் ஜே சூர்யா சோனா என்ற கதாபாத்திரத்தில் ஆவது நடித்துக் கொடுக்கும்படி கேட்டதால், நடிகை ஜோதிகா அப்படத்தில் நடித்துக் கொடுத்திருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.