விஜயின் அப்பார்ட்மெண்ட் பக்கத்தில் குடியேறிய பிரபல நடிகை.. எதுக்கு இந்த புது வீடு..!

Author: Vignesh
19 July 2024, 5:45 pm

விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் தயாராகி இருக்கும் திரைப்படம் தான் கோட் ஏஜிஎஸ் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றதாக தகவல்கள் வந்தது.

ஆனால், தற்போது ஜீ நிறுவனம்தான் கோட்படத்தின் சேட்டிலைட் உரிமையை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய் தீவிர அரசியலில் களமிறங்க திட்டமிட்டு கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026 தேர்தலில் போட்டியிட இருப்பதால் அதற்கு முன் ஒப்புக்கொண்டு படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து முழுமையாக விலக உள்ளார். தொடர்ந்து நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்களும் கேட்டு வருகிறார்கள். இருப்பினும், விஜய் அரசியலில் தற்போது இருந்தே தீவிரம் காட்ட தொடங்கிவிட்டார்.

Vijay - Updatenews360

இந்த நிலையில், நடிகர் விஜயின் லேட்டஸ்ட் கிளிக் தற்போது வெளியானது. அதாவது, நடிகர் விஜயுடன் நடிகை ரம்பா குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துள்ளார் அந்த புகைப்படங்களை நடிகை ரம்பாவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் விஜய் உங்களை பல வருடங்களுக்குப் பிறகு சந்திப்பது சந்தோஷம் என்று அதில் ரம்பா கூறி இருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய்யுடன் த்ரிஷாவின் பெயர் எப்படி அடிபட்டதோ அதேபோல் தற்போது, ரம்பாவின் பெயரும் அடிபட்டு வருகிறது. அதாவது, நடிகை ரம்பா விஜய்யின் அப்பார்ட்மெண்டுக்கு பக்கத்தில் குழந்தைகளுடன் தங்கிக் கொள்ள ஒரு வீட்டினை வாங்கி இருப்பதாகவும், ஏற்கனவே சென்னையில் ரம்பாவின் கணவர் மேஜிக் ஹோம் என்ற பர்னிச்சர் தொழிலை ஆரம்பித்து நடத்தி வருகிறார். அதையெல்லாம், இங்கு இருந்து பார்த்துக்கொள்ள அந்த வீட்டினை வாங்கி குடியேறியிருக்கிறார்களாம்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 183

    0

    0