ரம்பா வீட்டில் விஷேஷம்… பாவாடை தாவணியில் வசீகரிக்கும் மகள் – வைரல் போட்டோஸ்!
Author: Rajesh24 January 2024, 12:23 pm
90ஸ் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவரான இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி , போஜ்புரி உள்ளிட்ட பல மொழி படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருந்தார்.
தமிழில் அவர் நடித்த முதல் படம் கதிர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான உழவன் ஆகும். அவருடைய இரண்டாவது படமான உள்ளத்தை அள்ளித்தா வெற்றி பெற்று அவருக்குப் பெரும் புகழை அள்ளித் தந்தது. அருணாச்சலம் படத்தில் ரம்பாவின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. படங்களில் கவர்ச்சியாக வலம் வந்த ரம்பாவை ரசிகர்கள் அவரை தொடை அழகி என்று அழைத்தனர்.
ரம்பா கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார். தொடர்ந்து 90ஸ் மற்றும் 20ஸ் ஆரம்பத்தில் தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்து வந்தார்.
பின்னர் இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ரம்பா புது வீடு கட்டி குடிபெயர்ந்துள்ளார். அதன் கிரகப்பிரவேசம் பூஜையின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. குறிப்பாக அவரின் மூத்த மகள் ஷாஷா டீனேஜ் லுக்கில் பார்க்கவே ரொம்ப லட்சணமான அழகில் இருக்கிறார். அம்மாவை விட உயரமாக வளர்ந்து ஹீரோயின் மெட்டீரியலில் இருக்கும் அவர் விரைவில் திரைப்படங்களில் நடித்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் நெட்டிசன்ஸ்.