யாராவது அங்க Touch பண்ணா பிடிக்கவே பிடிக்காது.. கணவர் குறித்து ரம்பா ஓப்பன் டாக்..!

Author: Vignesh
12 January 2024, 10:36 am

‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்பா. இதன்பின் ‘செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார்.

rambha

நடிகை ரம்பாவிற்கு கடந்த 2010ஆம் ஆண்டு இந்திர குமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதனிடையே அடிக்கடி தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். நடிகை ரம்பா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய நிலையில் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறாராம்.

rambha

மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள ரம்பா சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், எப்போதும் பிசினஸ்சில் பிஸியாக இருக்கும் தனது கணவர் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை தனக்கு போன் செய்து நலம் விசாரிப்பார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சினிமா துறையில் இருப்பவர்களுக்கு கணவர் கிடைப்பது கஷ்டமான விஷயம் என்று குறிப்பிட்ட அவர், ஆனால் இந்திரகுமார் தனக்கு கிடைத்தது தனது பாக்கியம் என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதேபோல, தனக்கு வீட்டில் கிச்சன் பொருட்களை யாராவது டச் செய்தால் பிடிக்கவே பிடிக்காது என்று ரம்பா தெரிவித்துள்ளார்.

  • Sundar C new movie மார்க்கெட்டே இல்லை…சுந்தர் சி-யிடம் சரணடைந்த வாரிசு நடிகர்.!
  • Close menu