அவ்வை சண்முகி கெட்டப்புக்கு படாத பாடுபட்ட கமல் – என்ன ஒரே ஒரு கண்டீஷன் தான்!

Author: Shree
19 April 2023, 9:59 pm

உலக நயங்கன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.

இவரது நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் அவ்வை சண்முகி. இப்படத்தில் ஐயர் மாமியாக லேடி கெட்டப் போட்டு அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை பிரம்மிக்க செய்தார். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் ராபின் வில்லியம்ஸ் நடித்த மிசஸ் டவுட்ஃபயர் என்னும் ஆங்கிலப் படத்தின் ரீமேக்.

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்கில் நடைபெற்ற சில சுவாரஸ்யமான தகவல்களை ரமேஷ் கண்ணா பகிர்ந்துள்ளார். “கமல் சார் விடியற்காலை 4 மணிக்கு எழுந்து மேக்கப்புக்காக ரெடியாவார். 4 மணி நேரம் ஆகும் மேக்கப் முடிய. அது முடிஞ்சதும் பார்த்தா “அவ்வை சண்முகியா அழகாக மாறியிருப்பார்.

ஆனால் அந்த மேக்கப் வெறும் 4 மணி நேரம் தான் முகத்தில் மோல்ட் இருக்கும். அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மெல்ட்டாகும். அந்த 4 மணி நேரத்துக்குள்ளே அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் பரபரப்பாக படமாக்கணும். மொத்தம் 55 நாள் இதுமாதிரி பெண் வேடம் போட்டு கஷ்டப்பட்டு நடிச்சார் கமல். மேக்கப் போட்டுகொண்டாள் அவரால் சாப்பிடக்கூட முடியாது.

இருந்தாலும் இந்த கெட்டப் வெளியில் கசிந்திட கூடாது என்பதற்காக ஷூட்டிங் நடைபெற்ற போது, இதிலே நடிக்கிற யாரும் இங்கே கெஸ்ட்டுகளை அழைத்து வரக்கூடாதுன்னு கண்டீஷன் போட்டார். இருந்தாலும் ஜெமினி கணேசன் அவர்கள் யாரையாவது கூட்டிக் கொண்டு வந்து கமலிடம் அறிமுகப்படுத்துவார்.

மேக்கப் போட்டுகொண்டால் அங்கிருக்கும் யாருக்கும் கமல் சாரை அடையாளமே தெரியாது அவரிடமே வந்து மேடம், இங்க கமல் சார் எங்க இருக்காரு? என கேட்பார்கள் . அதற்கு அவர் இன்னைக்கி ஷூட்டிங்கை வரல என பெண் குரலில் பேசி அனுப்பிட்டு சிரிப்பார் என பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக்கொண்டார் ரமேஷ் கண்ணா.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 548

    3

    1