ஏண்டா நடிச்சேன்னு இருக்கு… ரம்யா கிருஷ்ணன் வேதனை!

Author: Shree
11 August 2023, 1:37 pm

தமிழ் சினிமாவில் 80 90களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். இவர் தன்னுடைய 14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி முதல் படமே இவருக்கு பெரும் தோல்வி படமாக அமைந்தது. அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் முதல் வசந்தம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

ramya krishnan - update news 360

மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். அதன்பின் பல படங்களில் நடித்து வந்தாலும் ரம்யா கிருஷ்ணனுக்கு போதிய அங்கீகாரமும் அடையாளமும் கிடைக்கவில்லை என்று சொல்லலாம். இவர் பல ஆண்டுகள் கழித்து படையப்பாவின் நீலாம்பரியாக நடித்தது மிகப் பெரிய அளவில் இவருக்கு கை கொடுத்தது.

அதன் பிறகு பாகுபலி படத்தில் சிவகாமி தேவி மேலும் இவருக்கு அதிகப்படியான வரவேற்பு கொடுத்தது. இவரை அனைவரும் ராஜமாதாவாகவே கருதினர். இவரை தவிர யாராலும் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இவரது நடிப்பு அருமையாக இருந்தது.

ramya krishnan - updatenews360

தற்போது பல ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்தின் மனைவியாக ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி கொடுத்த ரம்யா கிருஷ்ணன், நான் ஏண்டா படையப்பா படத்தில் நெகட்டிவ் ரோல்ல நடிச்சேன்னு வேதனை பட்டேன். ஆனால் அந்த படம் வெளியாகி 24 ஆண்டுகள் ஆகியும் இன்னும் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுக்கிறது.

அதே மாதிரி தான் பாகுபலி படத்தில் நடிக்கும்போதும் நான் ஷூட்டிங் போகவே நிறைய கண்டீஷன் போட்டேன். அதன் பின் படம் வெளியாகி வேற லெவல் ஹிட் ஆனதால், இந்த படத்தில் நடிக்கவா நம்ம அந்த பேச்சு பேசினோம்? என தோணுச்சு என கூறி சிரித்தார். தற்போது ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

https://www.youtube.com/shorts/NPu2ktDQ-p0
  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 2270

    8

    6