படையப்பாவுக்கு முன்பே ரஜினியுடன் நடிக்க வந்த வாய்ப்பு; மிஸ் பண்ணிய நீலாம்பரி,..

Author: Sudha
19 July 2024, 12:31 pm

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1994 இல் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் வீரா. ரஜினிகாந்த்,மீனா,ரோஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.வீரா திரைப்படம் தெலுங்கில் ராகவேந்திர ராவ் இயக்கிய அல்லரி முகுடு திரைப்படத்தின் ரீமேக்.

வீரா திரைப்படம் ரோஜா வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.சூரியன் திரைப்படத்திற்கு பிறகு ரோஜாவுக்கு வீரா படத்தில் நல்ல நடிகை என்னும் அந்தஸ்து கிடைத்தது.

வீரா திரைப்படத்தில் ரோஜா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ரம்யா கிருஷ்ணனிடம் கேட்டார்களாம்.ஆனால் கால்ஷீட் இல்லாத காரணத்தினால் அவர் மறுத்திருக்கிறார். பிறகு அந்த வாய்ப்பு ரோஜாவுக்கு கிடைத்துள்ளது.

அவர் ஓகே சொல்லியிருந்தால் நீலாம்பரிக்கு முன்னமே ரஜினியுடன் நடித்திருப்பார் ரம்யா கிருஷ்ணன்.

அதைப்போலவே நீலாம்பரி வாய்ப்பு முதலில் மீனாவுக்கு சென்றுள்ளது. அவர் மறுத்ததால் அந்த படையப்பா நீலாம்பரி கதாப் பாத்திரம் ரம்யா கிருஷ்ணனுக்கு சென்றது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!