ரஜினி கூட அந்த படத்தில் ஏன்டா நடிச்சமோணு இருந்துச்சு.. பல வருட ரகசியத்தை வெளியிட்ட ரம்யா கிருஷ்ணன்..!
Author: Vignesh8 August 2023, 2:45 pm
தமிழ் சினிமாவில் 80 90களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். இவர் தன்னுடைய 14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி முதல் படமே இவருக்கு பெரும் தோல்வி படமாக அமைந்தது. அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் முதல் வசந்தம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.

அதன்பின் பல படங்களில் நடித்து வந்தாலும் ரம்யா கிருஷ்ணனுக்கு போதிய அங்கீகாரமும் அடையாளமும் கிடைக்கவில்லை என்று சொல்லலாம். இவர் பல ஆண்டுகள் கழித்து படையப்பாவின் நீலாம்பரியாக நடித்தது மிகப் பெரிய அளவில் இவருக்கு கை கொடுத்தது.

அதன் பிறகு பாகுபலி படத்தில் சிவகாமி தேவி மேலும் இவருக்கு அதிகப்படியான வரவேற்பு கொடுத்தது. இவரை அனைவரும் ராஜமாதாவாகவே கருதினர். இவரை தவிர யாராலும் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இவரது நடிப்பு அருமையாக இருந்தது.
தற்போது பல ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி கொடுத்த ரம்யா கிருஷ்ணன் ஏண்டா படையப்பா படத்தில் நெகட்டிவ் ரோல்ல நடிக்கணுமா பண்ணணுமாணு தோணுச்சு… ரஜினி கூட நடிக்கும் போது நெகட்டிவா நடிக்கணுமானு தோணுச்சு ஆனா மிகப்பெரிய இடத்தை கொடுத்தது படையப்பா தான்.
50 வருட சினிமா வாழ்க்கையில் படையப்பா படத்திற்கு பின் தன்னுடைய கெரியர் உயர்ந்ததாகவும், நீலாம்பரியாக நடித்தது பயமாக இல்லை, தான் சந்தோசமாக இல்லை ரம்யா கிருஷ்ணனுக்கு திமிரும் இல்லை என்ன ஆகுமோ என்று நீலாம்பரியாக யோசித்தேன் என்று பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.