ஷூட்டிங் நடந்த காட்டில் ரெண்டு பேரும் அதுகூட இல்லாமல் படாதபாடுபட்டு .. கூச்சமின்றி பேசிய ரம்யா கிருஷ்ணன்..!
Author: Vignesh5 October 2023, 11:48 am
தமிழ் சினிமாவில் 80 90களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். இவர் தன்னுடைய 14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி முதல் படமே இவருக்கு பெரும் தோல்வி படமாக அமைந்தது. அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் முதல் வசந்தம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். அதன்பின் பல படங்களில் நடித்து வந்தாலும் ரம்யா கிருஷ்ணனுக்கு போதிய அங்கீகாரமும் அடையாளமும் கிடைக்கவில்லை என்று சொல்லலாம். இவர் பல ஆண்டுகள் கழித்து படையப்பாவின் நீலாம்பரியாக நடித்தது மிகப் பெரிய அளவில் இவருக்கு கை கொடுத்தது.
அதன் பிறகு பாகுபலி படத்தில் சிவகாமி தேவி மேலும் இவருக்கு அதிகப்படியான வரவேற்பு கொடுத்தது. இவரை அனைவரும் ராஜமாதாவாகவே கருதினர். இவரை தவிர யாராலும் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இவரது நடிப்பு அருமையாக இருந்தது. தற்போது ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து அமோக ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தார். இதனிடையே, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஷூட்டிங்கில் அனுபவித்த கஷ்டத்தை பற்றி ரம்யா கிருஷ்ணன் பேசியிருக்கிறார்.
நடிகைகளுக்கு அவுட்டோர் ஷூட்டிங் சமயத்தில் பெரிய பிரச்சினையாக இருப்பது கழிவறை தான், அப்படி ஒரு முறை ஒரு படத்தின் ஷூட்டிங் காட்டில் நடந்தது. அங்கு கழிவறை வசதியோ, கேரவன் கூட வசதியோ இல்லை. பயங்கர வெப்பம் என்பதால் எனக்கும் கலா மாஸ்டருக்கும் ஹீட்டால் லூஸ் மோஷன் ஆகிவிட்டது.
முறையான கழிவறை வசதி கூட அங்கு இல்லாததால், அதற்காக காட்டுக்குள் தேடி அலையாத இடமே கிடையாது என்றும், எப்போது ஷூட் முடியும் என்று காத்திருந்தோம். மேலும், பேட்டியில் லூஸ் மோஷன் என்ற வார்த்தையை கட் செய்துவிடுங்கள் என்று கூறியும் அதை அந்த பேட்டியில் ஒளிப்பரப்பும் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.