ரஜினியோட அந்த வீடீயோவை ரிலீஸ் பண்ணுங்க..எல்லோரும் பார்க்கட்டும்..ரம்யா கிருஷ்ணன் பர பர பேச்சு.!

Author: Selvan
6 March 2025, 9:56 pm

ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.!

ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

1986ஆம் ஆண்டு இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான முதல் வசந்தம் திரைப்படம் மூலம் நடிகை ரம்யா கிருஷ்ணன் திரையுலகில் அறிமுகம் ஆனார்,அதன் பிறகு பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்த அவருக்கு,1999ஆம் ஆண்டு வெளிவந்த படையப்பா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் மறக்க முடியாத பெயராக மாறினார்.

இதையும் படியுங்க: IPL போட்டியில் சில உடைகளுக்கு தடை விதித்த பிசிசிஐ..குடும்பத்தினருக்கும் கட்டுப்பாடு.!

நீலாம்பரி கதாபாத்திரத்தில் அவர் காட்டிய நடிப்பு, தமிழ் திரையுலகின் சிறந்த வில்லி கதாபாத்திரங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.பின்னர் பாகுபலி திரைப்பட வரிசையில் சிவகாமி தேவி வேடத்திலும்,சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.

Ramya Krishnan interview

சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில்,நடிகர் ரஜினிகாந்தின் திரையுலகில் காட்டும் தொழில் நேர்மை, ஒழுங்கு, மற்றும் அர்ப்பணிப்பு பற்றிக் குறிப்பிட்ட அவர்,ரஜினியின் டெடிகேஷன்,ஒரு காட்சிக்காக அவர் எடுக்கும் முயற்சி,இவை அனைத்தையும் ஒரு மேக்கிங் வீடியோவாக எடுத்து ரிலீஸ் பண்ணுங்க,புதுசா நடிக்க வரவங்க அந்த வீடீயோவை பார்த்தாலே போதும்,அவ்வளவு அனுபவங்கள் ரஜினியிடம் உள்ளது என அந்த பேட்டியில் கூறியிருப்பார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி