ரஜினியிடம் மைக் பிடிங்கி அரங்கத்தையே அதிர வைத்த ரம்யா கிருஷ்ணன் – ஒரு Second’ல நீலாம்பரியே வந்துட்டாங்க!

Author: Shree
29 July 2023, 11:50 am

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் நேற்று பிரம்மாண்டமாக இப்படத்தின் ஆடியோ லன்ச் விழா நடைபெற்றது.

அந்த விழாவில், ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை பற்றி பேசினார். சூப்பர்ஸ்டார் டைட்டில் என்னைக்குமே தொல்லை தான்.Hukum பாடலில் இருந்து சூப்பர்ஸ்டார் என்பதை மட்டும் எடுக்க சொன்னேன் என ரஜினி பேசிக்கொண்டிருந்தபோதே ரம்யா கிருஷ்ணன் திடீரென மேடைக்கு வந்து மைக் வாங்கி
“வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்கிட்ட தான் இருக்கும்… கூடவே பொறந்தது எங்கேயும் போகாது” என பேச அந்த அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது. இதனை ஒரு செகண்டல நீலாம்பரியே வந்துட்டாங்க என ரசிகர்கள் கூறினார்கள்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?