நீச்சல் உடையில் ஜம்முன்னு போஸ் கொடுத்துள்ள ரம்யா கிருஷ்ணன்.. இதுவரை பலரும் பார்த்திராத UNSEEN கிளிக்..!
Author: Vignesh29 February 2024, 5:50 pm
தமிழ் சினிமாவில் 80 90களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். இவர் தன்னுடைய 14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி முதல் படமே இவருக்கு பெரும் தோல்வி படமாக அமைந்தது. அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் முதல் வசந்தம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். அதன்பின் பல படங்களில் நடித்து வந்தாலும் ரம்யா கிருஷ்ணனுக்கு போதிய அங்கீகாரமும் அடையாளமும் கிடைக்கவில்லை என்று சொல்லலாம். இவர் பல ஆண்டுகள் கழித்து படையப்பாவின் நீலாம்பரியாக நடித்தது மிகப் பெரிய அளவில் இவருக்கு கை கொடுத்தது.
அதன் பிறகு பாகுபலி படத்தில் சிவகாமி தேவி மேலும் இவருக்கு அதிகப்படியான வரவேற்பு கொடுத்தது. இவரை அனைவரும் ராஜமாதாவாகவே கருதினர். இவரை தவிர யாராலும் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இவரது நடிப்பு அருமையாக இருந்தது. தற்போது ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படம் திரையில் வெற்றிகரமாக ஓடியது.
இந்நிலையில், அந்த காலத்தில் ரம்யா கிருஷ்ணன் மிக கிளாமராக படங்களில் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. 1989-ல் வெளிவந்த Paila Pacheesu என்ற படத்தில் ரம்யா கிருஷ்ணன் நீச்சல் உடையிலும் நடித்து இருக்கிறார். அவருடன் நடிகை டிஸ்கோ சாந்தியும் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.