செம அழகு.. சேலையில் தேவதையாக மாறிய ரம்யா நம்பீசன்.. Latest Pics..!

Author: Rajesh
3 May 2022, 6:22 pm

ரம்யா நம்பீசன்  தமிழில் ராமன் தேடிய சீதை, குள்ளநரிக் கூட்டம், பீட்சா ஆகிய படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானவர். இவர் ஒரு பாடகரும் கூட பாண்டியநாடு படத்தில் இவர் பாடிய “Fy Fy கலாச்சிஃபை பாடல்” மக்கள் மத்தியில் நல்ல ஹிட் அடித்தது.

நடிகை ரம்யா நம்பீசன் விஜய்சேதுபதியுடன் ‘பீட்சா’ ,’ சேதுபதி’, ‘சீதக்காதி’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். சேதுபதி படத்திற்கு பிறகு பல முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பு வாய்ப்புகள் வந்தும்,  அம்மா கேரக்டராகவே வந்ததால், அந்த படங்களில் நடிப்பதை நிராகரித்து விட்டார் ரம்யா நம்பீசன்.

தமிழில் கவின் நடிப்பில் வெளியான “நட்புன்னா என்னான்னு தெரியுமா” படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்தார் ரம்யா நம்பீசன் பிடித்த ரோல் அமைந்ததால் கவின் புதுமுக நடிகர் என்றும் பாராமல் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் தொடர்ந்து படங்கள் நடித்து வரும் ரம்யா நம்பீசன் நல்ல கதை கொண்ட கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார் . இது வரை எந்த படத்திலும் கவர்ச்சியாக நடிக்காத ரம்யா நம்பீசன் தற்போது சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் அழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

  • Surya Clash With Ajith அஜித்துக்கு எதிராக களமிறங்கும் சூர்யா.. ஒரு கை பார்க்க முடிவு!!
  • Views: - 1438

    9

    2