அப்பனே முருகா… நாங்க நல்லா வாழனும் – திருச்செந்தூரில் கணவருடன் ரம்யா பாண்டியன்!

Author:
18 November 2024, 10:20 pm

ரகசிய காதல்:

யோகா மாஸ்டர் ஆன லோவல் தவான் என்பவரை நடிகை ரம்யா பாண்டியன் சில மாதங்களாக ரகசியமாக காதலித்து அவருடன் லிவிங் லைப் வாழ்ந்து வந்திருக்கிறார். இதனிடையே பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ரிஷிகேஷில் இயற்கை எழில் சூழ இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதை அடுத்து கடந்த 15ஆம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக ரிசப்ஷன் நடந்தது.

ramya pandian

திருச்செந்தூரில் ரம்யா பாண்டியன்:

இதில் பல்வேறு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். இந்த நிலையில் தற்போது புதுமண தம்பதிகளாக ரம்யா பாண்டியனும் அவரது கணவர் லோவல் தவானும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

சூரியிடம் வாழ்த்து:

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அவர்களுடன் நடிகர் சூரி உடன் இருந்திருக்கிறார். இது எதேர்ச்சியான சந்திப்பாம்.

அதாவது நடிகர் சூரியும் திருச்செந்தூர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அந்த சமயத்தில் தான் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. புதுமண தம்பதிகளான ரம்யா பாண்டியன் மற்றும் அவரது கணவர் இருவரும் சூரியிடம் வாழ்த்து பெற்றிருக்கிறார்கள்.

  • Naga chaitanya Strict Order To Sobhita சோபிதாவுக்கு நாகசைதன்யா போட்ட கட்டளை… பற்றி எரியும் பிரச்சனை!!
  • Views: - 147

    0

    0