சட்டு புட்டு அடுத்த வேலை ஆரம்பிச்சாச்சு… கல்யாணம் முடித்த கையோடு ஹனிமூன் சென்ற ரம்யா பாண்டியன்!

Author:
11 November 2024, 5:39 pm

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக குறுகிய காலத்திலே இடத்தைப் பிடித்தவர் நான் ரம்யா பாண்டியின். இவர் பிரபல நடிகரான அருண்பாண்டியனின் அண்ணன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியனுக்கு லவால் தவான் என்பவருடன் திருமணம் நடைபெற்றது .

ramya pandian

அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக பலரும் அந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வந்தார்கள். ரம்யா பாண்டியன் பெங்களூரில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆஸ்ரமத்திற்கு சென்ற போது அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது என தெரிவித்திருந்தார்கள் .

இதை அடுத்து இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த சமயத்தில் பெற்றோர் சம்மதத்துடன் நவம்பர் 8ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். ரிஷிகேஷில் இயற்கை அழகு சூழ உறவினர்கள் முன்னிலையில் இந்த திருமணம் ஜாம் ஜாம் என நடைபெற்றது.

இந்நிலையில் ரம்யா பாண்டியனின் ஹனிமூன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது . தன் காதல் கணவர் லவால் தவானுடன் ஜோடியாக ரிஷிகேஷ் நதிக்கரையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த ஹனிமூன் ரம்யா பாண்டியனுக்கு திருமணம் நடைபெற்ற அதே ரிஷிகேஷில் தான் கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 313

    0

    0