அலிபாபாவும் அழகியும்…. ஜோதா – அக்பர் கெட்டப்பில் கணவருடன் ரம்யா பாண்டியன் – கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

Author:
16 November 2024, 10:44 am

நடிகை ரம்யா பாண்டியன்:

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக இருந்து வந்த ரம்யா பாண்டியன் அண்மையில் யோகா மாஸ்டர் லோவல் தவான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரகசியமாக இவர்கள் காதலித்து வந்த நிலையில் லிவிங் லைஃப் வாழ்ந்து வந்தனர் .

ramaya pandian

இதை அடுத்து பெற்றோர்கள் சம்பந்தத்துடன் ரம்யா பாண்டியன் ரிஷிகேஷில் கங்கை நதி கரையில் பூக்களால் மேடை அமைக்கப்பட்டு இயற்கை எழில் சூழ மிகவும் அழகாக உறவினர்கள் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் வெகு விமர்சையாக திருமணம் செய்து கொண்டார் .

யோகா மாஸ்டருடன் திருமணம்:

இந்த திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகியது. தொடர்ந்து அடுத்தடுத்து கணவருடன் ஆன புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் நடிகை ரம்யா பாண்டியன் தற்போது ஜோதா அக்பர் கேட்டப்பில் கணவருடன் நடத்திய போட்டோ சூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

ramaya pandian

இந்த புகைப்படத்தில் ரம்யா பாண்டியன் அழகான லெகங்கா அணிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் மேட்சிங் ஆக அவரது கணவரும் அதே நிறத்தில் குர்தா அணிந்து கொண்டு நடத்திய இந்த போட்டோ சூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ramaya pandian

கிண்டலுக்குள்ளாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்:

இதை பார்த்து ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் உங்களுக்கு வேற ஆளே இல்லையா? பணத்திற்காக இப்படி ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களது பேர் மேட்சிங் நல்லாவே இல்ல? இதை விட அழகான பையன் யாராவது பார்த்திருக்கலாம் என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள்.

  • Ajith Kumar expensive shirt in Good Bad Ugly அடேங்கப்பா…’குட் பேட் அக்லி’ டீசரில் அஜித் போட்டிருந்த சட்டை இவ்ளோ காஸ்ட்லீயா.!