தங்கச்சிய விட அக்காவ கட்டியிருக்கலாம் – ரம்யா பாண்டியன் அழகை பார்த்து அசந்துப்போன அசோக் செல்வன்!
Author: Shree14 September 2023, 5:00 pm
ரம்யா பாண்டியன் ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார், குறிப்பாக அப்படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.அதன் பின் ஆண் தேவதை போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
மக்களிடையே பெரிய வரவேற்பையும் ஆதரவும் பெற்றது அந்நிகழ்ச்சி. ரம்யா பாண்டியனை சினிமா மூலம் தெரிந்தவர்களை விட கூட ‘ குக் வித் கோமாளி’ மூலம் தெரிந்தவர்களே அதிகம். குறிப்பாக அந்நிகழ்ச்சியில் ரம்யாபாண்டியன் புகழுடன் இணைந்து செய்த சேட்டைகளும் , காமெடிகளும் மக்களை பெரிதும் கவர்ந்தது .விஜய் டிவியின் ‘குக்கு வித் கோமளி’ இறுதிச் சுவற்றில் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவுபெற அதன் பின் ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பட வாய்ப்புகள் வர தொடங்கின. இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் தற்போது தங்கை கீர்த்தி பாண்டியன் கல்யாணத்தில் பிங்க் நிற அழகிய புடவையில் தகதகன்னு தங்கம் போல் மின்னிய புகைப்படங்களை வெளியிட்டு இயற்கையின் அழகையே தோற்கடித்துவிட்டார்.