ஒரே ஒரு போட்டோ ஷூட் நடத்தி மிகப்பெரிய அளவில் ஒரே நைட்ல பேமஸ் ஆனவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய சேலையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்கள் வெளியிட அந்த புகைப்படம் ஒரே ஒரு நைட்டில் தீயாய் பரவி மிகப்பெரிய அளவில் வைரல் ஆகியது.
அதன் மூலம் அவருக்கு மார்க்கெட் கிடைத்தது இவர் ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஆண் தேவதை படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகர் ஆன அருண் பாண்டியனின் அண்ணன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ரம்யா பாண்டியன் தனக்கான தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தனது தனது சகோதரியுடன் கலந்து கொண்டார். அப்போது என் வாழ்க்கையில் மிகவும் மோசமான ஒரு காதல் தோல்வி ஏற்பட்டது.
அதிலிருந்து எப்படி மீள்வதென்றே தெரியாமல் மிகுந்த குழப்பத்தில் மன உளைச்சலில் இருந்தேன். அந்த சமயத்தில் உடம்பை ஒல்லியாகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டேன். அந்த அளவுக்கு என்னை கவலை வாட்டியது. அந்த நேரத்தில் என்னுடைய அக்கா தான் என்னுடைய அம்மா மாதிரி இருந்து அதிலிருந்து என்னை மீட்டுக் கொண்டு வந்தார் என ரம்யா பாண்டியன் மிகுந்த உருக்கத்தோடு பேசி இருக்கிறார்.