எந்த Gym-னு சொல்லுங்க நாங்களும் வரோம்.. ரம்யா பாண்டியனின் Workout வீடியோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

Author: Vignesh
28 June 2024, 12:09 pm
ramya pandiyan
Quick Share

தமிழ் சினிமாவில் டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலமாக 2015ல் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன். இந்த படத்தினை தொடர்ந்து, இவர் ஜோக்கர் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட ரம்யா பாண்டியன், உடல் எடையை குறைத்து அவ்வப்போது, மொட்டைமாடி போட்டோஷூட்டை வெளியிட்டு அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்தார்.

இதன் பின்னர் ஆண் தேவதை படத்தில் நடித்தவர் குக் வித் கோமாளி சீசன் போட்டியாளராக கலந்து கொண்டு ரன்னரப் இடத்தினையும் பிடித்தார். சினிமாவில் பிரபலமானதை விட குக்வித் கோமாளியில் வந்ததே இவருக்கு அதிகப்படியான ரசிகர்களை கொடுத்தது. பின்னர், கலக்கப்போவது யாரு சீசனில் நடுவராகவும் பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில், கலந்து கொண்டு மூன்றாவது ரன்னரப்பாக பிக் பாஸ் அல்டிமேட் சீசனில் இரண்டாவது ரன்னர் அப் ஆகவும் இடம் பிடித்தார். இந்நிலையில், ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நபர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. அவ்வப்போது, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது, வெறித்தனமான ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அந்த ஜிம்மு எங்க இருக்குன்னு சொல்லுங்க நாங்களும் வந்து சேர்ந்திருக்கிறோம் என்று கமெண்ட் களில் தெரிவித்து வருகின்றன.

Views: - 45

0

0

Leave a Reply