பிறந்த நாள் NEXT..பிரெண்ட்ஷிப் FIRST…அல்லு அர்ஜுனை சந்தித்த பிரபல நடிகர்..இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

Author: Selvan
14 December 2024, 4:21 pm

ராணா டகுபதியின் பிறந்தநாளில் அல்லு அர்ஜுனை சந்தித்த நிகழ்வு

புஷ்பா 2 பட பிரச்சனையால்,திடீரென நேற்று அல்லு அர்ஜுனை அவரது வீட்டிற்கு சென்று கைது செய்தனர்.இந்த அதிரடி சம்பவத்தால் அவரது குடும்பம் மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்கள்,திரையுலகினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

Telugu cinema stars support Allu Arjun

அல்லு அர்ஜுனனின் அசுர வளர்ச்சியை முட்டு கட்டு போட தான் இந்த மாதிரி நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என பலரும் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்த சூழலில் இன்று அல்லு அர்ஜுன் ஜாமினில் இருந்து வீடு திரும்பினார்.அவரை அவரது குடும்பத்தினர் கண்ணீரோடு கட்டியணைத்து ஆறுதல் கூறினர்.இந்த சூழலில் பல தெலுங்கு சினிமா பிரபலங்கள்,அல்லு அர்ஜுன் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்க: கொண்டாட்டத்தில் கணவர்…திண்டாட்டத்தில் மனைவி…ஊரை காலி பண்ண சூப்பர் நடிகை முடிவு…!

புஷ்பா 2 படத்தின் இயக்குநர் சுகுமார், நடிகர்கள் விஜய தேவரகொண்டா,நாக சைதன்யா,சிரஞ்சீவி என பல முன்னணி தெலுங்கு சினிமா பிரபலங்கள் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ராணா,அல்லு அர்ஜுன் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.ராணா வரும் போது அல்லு அர்ஜுன் போன் பேசிக்கொண்டு இருப்பார்,அப்போது ராணா அவரை தொந்தரவு பண்ண வேண்டாம்னு ஒதுங்கி போவார்.அதனை பார்த்த அல்லு அர்ஜுன்,ராணாவின் கையை இறுக பிடித்துக்கொண்டு பின்பு கட்டியணைத்து கொள்வார்.

இன்று ராணாவின் 40வது பிறந்தநாள்,அவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில்,குடும்பத்துடன் பிறந்தநாளை செலவழிக்காமல்,அல்லு அர்ஜுன் தான் முக்கியம் என அவரை காண வந்துள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

  • Ajith Vidamuyarchi Trailer Release Update விடாமுயற்சி ட்ரைலர் ரெடி : அப்போ ரிலீஸ் தேதி…இருங்க பாய்..நாளைக்கு ஒரு வெயிட்டான சம்பவம் இருக்கு..!