பிரபல நடிகையிடம் மன்னிப்பு கேட்ட பாகுபலி நடிகர்.. என்னதான் இருந்தாலும் அப்படி பேசி இருக்க கூடாது..!

Author: Vignesh
16 August 2023, 8:30 pm

த்ரிஷாவின் முன்னாள் காதலர் ராணா டகுபதி பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள். ஆனால், அதற்குப் பிறகு ராணா நடித்த எந்த படங்களும் பெரிய அளவிலான வரவேற்பு பெறவில்லை

Raana Trisha - Updatenews360

இந்த நிலையில், சமீபத்தில் துல்கர் சல்மானின் கிங் ஆப் கோதா படத்தின் விழா நடைபெற்றது. அதில், ராணாவும் கலந்து கொண்டு, மேடையில் பேசிய ராணா கூறிய ஒரு விஷயம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதால் தற்போது அவர் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

rana-daggubati-updatenews360

அதாவது மேடையில், பேசியபோது, துல்கர் சல்மான் மிகவும் பொறுமையானவர். நடிப்பு பள்ளியில் படிக்கும் போதிலிருந்து அவர் தனக்கு ஜூனியர். அப்போதிலிருந்து அவரை தெரியும். அவர் நடித்த ஒரு படத்தின் சூட்டிங்கை பார்க்க சென்று இருந்ததாகவும், அது தன்னுடைய வீட்டின் அருகில் இருந்ததாலும், தயாரிப்பாளர் தன்னுடைய நண்பர் என்பதாலும், சென்றதாகவும் அந்த ஷூட்டிங்கில் ஒரு பிரபல ஹிந்தி நடிகை நடிக்க வந்திருந்தார். அவர் மொத்த குழுவினரையும் காக்க வைத்துவிட்டு, அவரது கனவருடன் போனில் பேசிக் கொண்டிருந்தார். ஏதாவது முக்கியமான விஷயம் என்றால் கூட பரவாயில்லை. ஆனால், அவர் ஷாப்பிங் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

rana-daggubati-updatenews360

மிகவும் அமைதியாக காத்துக் கொண்டிருந்தார் துல்கர். அந்த நடிகை வந்து நடித்தபோது டயலாக்கை மறந்துவிட்டார். அவரால் சரியாக நடிக்க முடியவில்லை. ஆனால், துல்கர் பல டேக் வந்தாலும் பொறுமையாக முகம் சுளிக்காமல் நடித்தார் என ராணா கூறி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

rana-daggubati-updatenews360

அதாவது The Zoya Factor என்ற படத்தில் நடித்தபோது சோனம் கபூர் இப்படி செய்தார் என கண்டுபிடித்த ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் மோசமாக ட்ரோல் செய்ய தொடங்கிவிட்டனர். இது பெரிய சர்ச்சையான நிலையில் ராணா மன்னிப்பு கேட்டு பதிவு செய்திருக்கிறார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 357

    0

    0