நடிகர் ராணா மீது திடீர் வழக்கு….துருவி துருவி விசாரணையில் ஈடுபடும் போலீசார்..!

Author: Selvan
13 January 2025, 6:50 pm

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நடிகர் ராணா

சமீபத்தில் புஷ்பா-2 தியேட்டர் பிரச்சனையில் ஒரு பெண்மணி உயிரிழந்த நிலையில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து,பின்பு பல போராட்டங்களுக்கு பிறகு அந்த பிரச்னையில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

Rana Daggubati  case

இந்த நிலையில் தற்போது மற்றொரு பிரபல தெலுங்கு நடிகரான ராணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இவருக்கு ஹைதராபாத் பிலிம் நகரில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை நந்தகுமார் என்பவருக்கு சமீபத்தில் குத்தகை விடுத்துள்ளார்.அந்த இடத்தில நந்தா ஒரு பிரம்மாண்ட ஹோட்டலை நடத்தி வந்து கொண்டிருந்தார்.

இதையும் படியுங்க: மீண்டும் வைரலாகும் “அஜித்தே”…AK-க்கு தனது ஸ்டைலில் வாழ்த்து கூறிய ஹிப் ஹாப் ஆதி..!

சமீபத்தில் நடிகர் ராணா குடுமபத்திற்கும் ஹோட்டல் உரிமையாளரான நந்தாவிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக குத்தகைக்கு விடப்பட்ட இடத்தை நடிகர் ராணா திரும்ப கேட்டுள்ளார்.அதற்கு நந்தா மறுப்பு தெரிவிக்க,உடனே அவருக்கு தெரியாமல் ஹோட்டலை சட்டவிரத்தோமாக இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளார்,இதனால் ஹோட்டல் உரிமையாளரான நந்தா தனக்கு 20 கோடிக்கு மேல் நஷடம் ஏற்பட்டுள்ளதாக ராணா மீது புகார் கொடுத்துள்ளார்.இதனால் போலீசார் ராணா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!