சாய்பல்லவியை கொக்கி போட்டு தூக்கிய திருமணம் ஆன நட்சத்திர நடிகர் – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

Author: Shree
4 October 2023, 6:58 pm

நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.

அந்தவகையில் தற்போது சாய்பல்லவி அடுத்ததாக நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் படத்தில் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் நடிக்க சாய் பல்லவி சீதையாக நடிக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகப்போகும் இப்படம் மொத்தம் மூன்று பாகங்களாக உருவாக உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் 2024 பிப்ரவரியில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 355

    0

    0