ராஜ வாழ்க்கை வாழும் ரன்வீர் சிங்… மனைவி தீபிகா படுகோனின் சொத்து இத்தனை கோடியா?

Author: Shree
6 July 2023, 10:05 am

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளான ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோன் இருவரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர் கடந்த 2018-ஆம் ஆண்டு இத்தாலியில் கோலாகலமாக மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்டனர். இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். திருமணத்திற்கு பின்னர் மும்பையில் ரன்வீரின் வீட்டில் இருவரும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து தீபிகா படுகோன் பல படங்களை கையில் வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் கூட கவர்ச்சி குறையாமல் தாராளமாக சுதந்திரமாக நடித்து வருகிறார் தீபிகா படுகோன். அதற்கெல்லாம் அவரது கணவர் தான் சுதந்திரம் கொடுக்கிறார். ரன்வீர் சிங் மிகவும் ஜாலியான டைப் கொண்ட நபர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். தீபிகா படுகோனுக்கு ஏற்கனவே பல காதல் தோல்விகள் இருந்துள்ளது. குறிப்பாக அவர் ரன்பீர் கபூரை பல ஆண்டுகள் காதலித்து அவரால் ஏமாற்றப்பட்டார். அந்த சமயத்தில் தீபிகா படுகோன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் செம வைரலாக பரவியது.

அதன் பின்னவர் தீபிகா ரன்வீர் சிங் மீது காதல்வயப்பட்ட பின்னர் தான் மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார். தற்ப்போது வரை அவரை மகிழ்ச்சியாகவே வைத்திருக்கிறார் ரன்வீர் சிங். இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி ஆர்ச்சர்யப்படுத்தியுள்ளது. அவர் ரூ 497 கோடி சொத்து வைத்திருக்கிறார். ஆனால் கணவர் ரன்வீர் சிங் சொத்து ரூ. 245 கோடி சொத்து மட்டுமே வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிலும் தீபிகா படுகோன் தன் கணவருக்கு பிடித்த விஷயங்கள் பார்த்து பார்த்து செய்வாராம். ஆம், ரன்வீர் சிங்கிற்கு லக்ஸரி பைக் வாங்குவதில் அதிகம் ஆசை கொண்டவராம். அதையெம் தீபிகா படுகோன் தெரிந்துக்கொண்டு பரிசளிப்பாராம். மேலும் ரன்வீர் சிங்கிடம் தற்போது 3.2 கோடி மதிப்புள்ள ஆஸ்டன் மார்ட்டின் கார், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி உருஸ் மற்றும் 1.8 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ் மேபேக் உள்ளிட்ட டாப் கிளாஸ் காஸ்ட்லி கார்கள் உள்ளதாம். அவ்வப்போது மனைவியுடன் கோடிக்கணக்கில் செலவு செய்து வெளிநாடுகளுக்கு ட்ரிப் அடித்தும் வருகிறார். எனவே ரன்வீர் சிங் தனது திருமண வாழ்க்கையில் ஒரு ராஜா போல் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 878

    5

    5