கன்னட நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்க: என் ஆடையை கழட்ட சொன்னாங்க..பிரபல தொகுப்பாளர் DD சொன்ன அதிர்ச்சி தகவல்.!
டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில்,ரன்யா ராவ் துபாயில் ‘விரா டயமண்ட்ஸ்’ என்ற பெயரில் ஒரு நகைக்கடையை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் தங்கத்தை துபாய்க்கு இறக்குமதி செய்து, இந்தியாவுக்கு கடத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதே வழக்கில் தெலுங்கு நடிகரும் ரன்யா ராவின் நண்பருமான தருண் ராஜு கைது செய்யப்பட்டுள்ளதோடு,ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையாகக் கூறப்படும் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராமசந்திர ராவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.தங்கக் கடத்தல் வழக்கை தொடர்ந்து சிபிஐ,அமலாக்கத்துறை ஆகியவை விசாரித்து வருகின்றன.
விசாரணையின் போது,ரன்யா ராவ் தனது நிறுவனம் மூலம் துபாய்க்கு தங்கம் இறக்குமதி செய்து,இந்தியாவுக்கு கடத்திய தகவல் அம்பலமானது.மேலும்,ஜெனீவா மற்றும் பாங்காக்கிலிருந்து தங்கம் வாங்கப்பட்டு,துபாயில் இறக்குமதி செய்துள்ளார்கள்,ஆனால், அங்கே விற்பனை செய்யப்படாமல், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தியுள்ளனர்.
கடந்த ஒரு வருடத்தில் ரன்யா ராவ் 27 முறை இந்தியா–துபாய் இடையே பயணம் செய்துள்ளார்.மேலும், ஹவாலா வழியாக 1.70 கோடி பண பரிவர்த்தனை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வழக்கின் பின்னணியில் சர்வதேச அளவில் பெரிய கடத்தல் கும்பல் செயல்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர்,தொடர்ந்து விசாரணை நடக்கும் போது,மேலும் பல முக்கிய நபர்கள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.