கர்நாடகா நமக்கு செய்த ஒரே நல்ல விஷயம் இப்படி ஒரு அழகியை இறக்குமதி செய்ததுதான். அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா.
எதற்காக கன்னட சினிமாவுக்கு நன்றி சொன்னோம் என்றால், கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா. மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.
அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகிய படம் வசூலில் சக்கை போடு போட்டது. அந்த படத்தில் அய்யா சாமி, வாயா சாமி என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பேய் ஹிட். தற்போது விஜயுடன் வாரிசு படத்தில் நடித்து பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், படம் வெற்றி பெற்றது.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை ராஷ்மிகா அதன்படி நடிகை ராஷ்மிகா ஹைதராபாத், மும்பை, கோவா, கூர்க், மற்றும் பெங்களூரூ ஆகிய 5 மாநிலங்களில் 5 சொகுசு பங்களா வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து பேசியுள்ள ராஷ்மிகா ‘அது உண்மையாக இருக்க வேண்டும் என்று தானும் விரும்புவதாக’ என்று பதிவு செய்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விண்வெளி நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் விண்வெளி நாயகன் என்று அவரை இப்போது…
விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…
நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
This website uses cookies.