அப்ப எல்லாமே பொய்யா?.. பதறியடித்து கொண்டு ராஷ்மிகா வெளியிட்ட பதிவு..!
Author: Vignesh7 February 2024, 10:34 am
இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.
ஆம், இவர்கள் இவரும் சேர்ந்து 2018ம் ஆண்டில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ராஷ்மிகாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய துவங்கியது. தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து இந்தி திரைப்படத்திலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், அனிமல் படம் மூலமாக ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகாவின் படம் 900 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தாலும், தற்போது OTT ரிலீசுக்கு பிறகு அதிகம் தோல்விகளை படம் சந்தித்து வருகிறது. குறிப்பாக, பெண்களை மிக மோசமாக படத்தில் காட்டி இருப்பதாக பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தெலுங்கு படங்களில் நடிக்க, நான்கு கோடி ரூபாய் ராஷ்மிகா சம்பளமாக கேட்டு வருவதாகவும், அதற்கு முன் ரெண்டிலிருந்து ரெண்டு புள்ளி ஐந்து கோடி வரை தான் அவரது சம்பளம் இருந்த நிலையில், தற்போது டபுள் மடங்காக உயர்த்திய நிலையில், அதிக சம்பளம் கேட்பதால் தெலுங்கு தயாரிப்பாளர்கள் ராஷ்மிகா என்றாலே தலைதரித்து ஓடுகிறார்களாம். அவர் சம்பளத்தை குறைக்காவிட்டால் தெலுங்கில் வாய்ப்புகள் குறைந்து விடும் என ஒரு தயாரிப்பாளர் வெளிப்படையாகவே .
இந்நிலையில், இது குறித்து ராஷ்மிகா அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நான் சம்பளத்தை உயர்த்துவதாக யார் சொன்னது இப்படி செய்தி வருவதை பார்த்த பிறகு தான் அப்படி செய்யலாம் என தோன்றுகிறது. தயாரிப்பாளர்கள் கேட்டால் மீடியாவில் அப்படி சொல்கிறார்கள் அதனால், தான் என சொல்லப் போகிறேன் என்று ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
BUZZ⚠️#RashmikaMandanna Increased her Remuneration again after #Animal success 🏃
— Filmy Bowl (@FilmyBowl) February 6, 2024
From inside reports, Currently she's charging around 4Cr – 4.5cr per film pic.twitter.com/amyyz5iTEP