ரஜினியின் இடத்தை தட்டிப் பறித்த ராஷ்மிகா?.. இனிமே அவங்க நேஷனல் க்ரஷ் இல்ல.. இன்டர்நேஷனல் க்ரஷ் ..! (வீடியோ)

Author: Vignesh
1 March 2024, 5:26 pm

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

rashmika mandanna -updatenews360

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.

rashmika mandanna -updatenews360

ஆம், இவர்கள் இவரும் சேர்ந்து 2018ம் ஆண்டில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ராஷ்மிகாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய துவங்கியது. தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து இந்தி திரைப்படத்திலும் கவனத்தை செலுத்தி வருகிறார். கடைசியாக இந்தியில் அனிமல் படத்தில் நடித்து சர்ச்சைக்கு உள்ளாகினார்.

rashmika mandanna

இந்நிலையில், ராஷ்மிகா சமீபத்தில் ஜப்பானுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஷாக் கொடுக்கும் வகையில், அதிகப்படியான ரசிகர்கள் கூட்டம் அவரது புகைப்படங்களை வைத்துக்கொண்டு வரவேற்று இருக்கிறார்கள். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன் முத்து படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் ஜப்பானிய ரசிகர்களை கவர்ந்தார். அந்த அளவிற்கு அதற்கு முன்பும் அதற்குப் பின்பு எந்த ஒரு நடிகரும் ஜப்பானில் இத்தனை ரசிகர்களை கொண்டு இருக்க வில்லை. தற்போது, புஷ்பா படம் மூலமாக ராஷ்மிகா மந்தனா நேஷனல் க்ரஷ் என்பதிலிருந்து இன்டர்நேஷனல் க்ரஷ்மாறிவிட்டார் என்று கூறி வருகிறார்கள். மேலும், புஷ்பா 2 திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகியுள்ள நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் மவுஸ் சர்வதேச அளவில் அதிகரித்துள்ளதாகவும் கூறி வருகிறார்கள்.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!