அவரை கழட்டிவிட்டேன் இப்போ இவரு… கேரவனில் நடிகருடன் தனிமையில் ராஷ்மிகா!

Author: Shree
7 April 2023, 9:22 pm

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமாகி வருகிறது.

மேலும் விஜய் தேவரகொண்டாவுக்கு மிகவும் பிடித்த மோதிரத்தை ராஷ்மிகா அணிந்திருக்கிறார். இதனால் அவர்கள் ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக செய்திகள் வெளியானது. பின்னர் “ஐயோ.. ரொம்ப யோசிக்காதிங்க” என்று ரிப்ளை செய்து அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார் ராஷ்மிகா.

இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் விமர்சகர் உமைர் சந்து, புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனுடன் நடித்த ராஷ்மிகா அவர் மீது காதல் வயப்பட்டுள்ளதக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் ஷூட்டிங்கில் இருவரும் கேரவனில் தனியாக இருப்பதாகவும் கூறி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

  • monalisa viral girl soon get chance to act in serial பட வாய்ப்பு பறிபோனால் என்ன?… வைரல் பெண் மோனலிசாவுக்கு வந்த திடீர் வாய்ப்பு?