அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் ராஷ்மிகா. மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.
அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா. கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகிய படம் வசூலில் சக்கை போடு போட்டது. அந்த படத்தில் அய்யா சாமி, வாயா சாமி என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பேய் ஹிட். தற்போது, தமிழில் வெளியாகி நல்ல விமர்சனம் பெற்று வரும் வாரிசு திரைப்படத்தில் விஜய் ஜோடியாக நடித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு “கிர்க் பார்ட்டி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா அப்படத்தின் போதே ரக்சித் ஷெட்டி மற்றும் ராஷ்மிகா ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்த காதல் நாளடைவில் இருவரும் நித்சயதார்தம் செய்து திருமணம் வரை சென்றது. பின்னர் ராஷ்மிகா நடித்த படங்கள் தெடர்ந்து வெற்றியடையவே திருமணத்தில் இருந்து விலகிவிட்டார்.
இப்படி இருக்கும் போது ஏற்கனவே நடிகை ராஷ்மிகா முதலில் அறிமுகமாகிய கன்னடத்தை மறந்து விட்டார் என்று கன்னட ரசிகர்கள் கோவமடைந்துள்ளார். அதாவது தற்போது கன்னடத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் வெற்றிநடை போட்டுக்கொன்றிருக்கும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கிய “காந்தாரா” திரைப்படத்தை பற்றி பேசியதால் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
இதனை தொடர்ந்து கன்னட ரசிகர்கள் பலரும் இவரை தொடர்ந்து திட்டி தீர்த்து வருகின்றனர். வாரிசு படத்தில் ராஷ்மிகா சில காட்சிகளில் மட்டும் தான் வருவார். இதனால் பலரும் இந்த படத்தில் ராஷ்மிகா நடித்திருக்க தேவையில்லை என்றெல்லாம் இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.
இப்படி ஒரு நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஷ்மிகா “எனக்கு தெரியும் இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தில் சில காட்சிகளும், இரண்டு பாடல்களும் மட்டும் தான் இருந்தது, பெரிதாக ஒன்றும் இல்லை. இருந்தாலும் நான் தளபதி விஜய்க்காக மட்டும் தான் நடித்தேன்” என்று கூறியிருந்தார்.
இவர் சில கருத்துக்களை ஓப்பனாக பேசிவிடுவதால் பல சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வது குறிப்பிடத்தக்கது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.