திருமணமான நடிகருடன் கசமுசா… ராஷ்மிகாவின் வீடியோவை பார்த்து பதறிப்போன நெட்டிசன்ஸ்..!

Author: Vignesh
1 December 2023, 1:00 pm

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.

முன்னதாக ராஷ்மிகா அமிதாப் பச்சனுடன் இணைந்து குட்பாய் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது சந்திப் ரெட்டி பங்கா இயக்கத்தில் உருவாகி வரும் அனிமேல் எனும் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஹீரோ பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

டீசர், ரொமான்டிக் பாடல் என அடுத்தடுத்து வெளியானதை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் வெளியாகியது. காதல் , ஆக்ஷன், ரொமான்ஸ் என படத்தின் தரம் வேற லெவலில் உள்ளது. குறிப்பாக நடிகர் ரன்பீர் கபூரின் வெறித்தனமான ஆக்டிங் ரசிகர்களை கவர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 1ம் தேதியான இன்று வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தில் நடிகை ராஷ்மிகா எல்லை மீறிய அரைகுறை ஆடையை காட்சிகளில் கதாநாயகனுடன் முத்த காட்சிகளும் நடித்து முகம் சுளிக்க வைத்திருக்கிறார். அந்த காட்சிகளை நெட்டிசன்கள் இணையதளத்தில் பகிர்ந்து இதை நாங்கள் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை என்று விமர்சித்தும் வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 352

    0

    0