ராஷ்மிகாவுக்கு இவ்வளவு குட்டி தங்கையா? ரக்சா பந்தனில் வெளியிட்ட கியூட் போட்டோஸ்!

Author:
20 August 2024, 11:07 am

பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் முதன்முதலில் கன்னடத்தில் வெளிவான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகினார்.

அதன் பிறகு தெலுங்கில் சாலோ திரைப்படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார். தமிழ் சினிமாவில் முதன் முதலில் சுல்தான் திரைப்படத்தின் மூலமாக நேரடியாக ஹீரோயினானது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதற்கு முன்னதாக வெளிவந்த டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் தனது தங்கையுடன் நேற்று ரக்ஷா பந்தன் கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.

ராஷ்மிகாவின் தங்கை சிறுமியாக இருப்பதை பார்த்து… ராஷ்மிகாவுக்கு இவ்வளவு சின்ன தங்கச்சியா? பாலரும் வியப்புடன் இந்த புகைப்படத்தை பார்த்து ஷேர் செய்து வைரல் ஆகியுள்ளனர். ராஷ்மிகாவிற்கு தற்போது 28 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி