மீண்டும் மீண்டுமா.. விடாமல் துரத்தும் டீப் ஃபேக்.. வைரலான அடுத்த வீடியோ – அப்செட்டில் ராஷ்மிகா..!

Author: Vignesh
15 December 2023, 6:30 pm

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

rashmika mandanna -updatenews360

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.

ஆம், இவர்கள் இவரும் சேர்ந்து 2018ம் ஆண்டில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ராஷ்மிகாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய துவங்கியது. தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து இந்தி திரைப்படத்திலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

அண்மையில் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாச வீடியோவாக வெளிவந்து பேரதிர்ச்சி கொடுத்தது. இச்சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இச்சம்பவம் பூதாகரமாக வெடித்து டெல்லி போலீசார் சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்து துரித விசாரணை நடத்தி வருகின்றனர்.

rashmika mandanna

அந்த விசாரணையின் அடிப்படையில் 19 வயது நபர் ஒருவர் சிக்கியுள்ளார். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோ வெளியிட்டது குறித்து கேட்டதற்கு, அந்த மார்பிங் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து டவுன்லோட் செய்த பின்னரே, தனது பக்கத்தில் அப்லோட் செய்தேன் என்று விளக்கம் அளித்து இருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

rashmika mandanna -updatenews360

இந்த மாதிரி தவறாக சித்தரித்து மார்பிங் வீடியோவை வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை என்று மத்திய அரசும் எச்சரித்து இருந்தது. இந்நிலையில், ராசிகர்களால் டீப் ஃபேக் வீடியோ ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பெண்களின் பாதுகாப்பு என்பது தொடர் சிக்கலில் இருந்து வருவதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 524

    0

    0