“நான் என்னதான் செய்யணும்.. சினிமாவை விட்டு வெளியேறிவிடவா?” விமர்சனங்களால் மனம் நொந்து பேசிய ராஷ்மிகா..!

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2023, 8:00 pm

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் ராஷ்மிகா. மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

rashmika mandanna -updatenews360

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா. கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகிய படம் வசூலில் சக்கை போடு போட்டது. அந்த படத்தில் அய்யா சாமி, வாயா சாமி என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பேய் ஹிட். தற்போது, தமிழில் வெளியாகி நல்ல விமர்சனம் பெற்று வரும் வாரிசு திரைப்படத்தில் விஜய் ஜோடியாக நடித்துள்ளார்.

varisu - updatenews360

2017ஆம் ஆண்டு “கிர்க் பார்ட்டி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா அப்படத்தின் போதே ரக்சித் ஷெட்டி மற்றும் ராஷ்மிகா ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்த காதல் நாளடைவில் இருவரும் நித்சயதார்தம் செய்து திருமணம் வரை சென்றது. பின்னர் ராஷ்மிகா நடித்த படங்கள் தெடர்ந்து வெற்றியடையவே திருமணத்தில் இருந்து விலகிவிட்டார்.

இப்படி இருக்கும் போது ஏற்கனவே நடிகை ராஷ்மிகா முதலில் அறிமுகமாகிய கன்னடத்தை மறந்து விட்டார் என்று கன்னட ரசிகர்கள் கோவமடைந்துள்ளார். அதாவது தற்போது கன்னடத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் வெற்றிநடை போட்டுக்கொன்றிருக்கும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கிய “காந்தாரா” திரைப்படத்தை பற்றி பேசியதால் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

இதனை தொடர்ந்து கன்னட ரசிகர்கள் பலரும் இவரை தொடர்ந்து திட்டி தீர்த்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஷ்மிகா ”சில நேரங்களில் என உடலால் மக்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு ஆளாகிறேன். நான் ஒர்கவுட் செய்யாமல் குண்டாக இருந்தாலும் தவறு, ஒர்கவுட் செய்து ஒல்லியாக ஆனாலும் தவறு. நான் ஓவராக பேசினாலும் கிரிஞ் என்று கூறுகிறார்கள். பேசவில்லை என்றால் இந்த பொண்ணுக்கு அதிக திமிரு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

rashmika mandanna -updatenews360

நான் என்னதான் செய்வது, சினிமாவை விட்டு வெளியேறிவிடவா? இல்லை வேண்டாமா? என்னிடம் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், என்னிடம் அதை தெளிவாக கூறிவிடுங்கள். தவறான முறையில் நினைக்காதீர்கள். உங்களுடைய வார்த்தைகள் மனரீதியாக துன்புறுத்துகிறது‘ என்று மனம் நொந்து பேசியுள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 518

    7

    1