இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?
Author: Prasad29 April 2025, 9:08 pm
நேஷனல் கிரஷ்
இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை ரசிப்பவர்கள் பலர் உண்டு. அது மட்டுமல்லாது சமீப காலமாக பல திரைப்படங்களில் கவர்ச்சியை அள்ளித் தெளித்து வருகிறார். குறிப்பாக அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “புஷ்பா 2” திரைப்படத்தில் “பீலிங்கஸ்” பாடலுக்கு அவர் ஆடிய நடனம் டிரெண்டிங் ஆனது.

“புஷ்பா 2” திரைப்படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் “சாவா”, “சிகந்தர்” ஆகிய திரைப்படங்களில் நடித்த ராஷ்மிகா மந்தனா, தனுஷின் “குபேரா” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து ராஷ்மிகா பாலிவுட்டில் நடித்து வரும் ஹாரர் திரைப்படம்தான் “தாமா”.
இரத்தக்காட்டேரியா?
“தாமா” திரைப்படம் Maddock Horror Comedy Universe-ற்குள் அடங்கும் திரைப்படமாகும். அதாவது Maddock என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் ஹாரர் திரைப்படங்கள் அடங்கிய யுனிவர்ஸ் இது. இதில் இதுவரை “ஸ்திரி”, “பேடியா”, “மூஞ்சுயா”, “ஸ்திரி 2” ஆகிய திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. இந்த வரிசையில் தற்போது உருவாகி வரும் திரைப்படம்தான் “தாமா”.

ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் “தாமா” திரைப்படம் Vampire வகையில் உருவாகும் திரைப்படம் என கூறப்படுகிறது. அதாவது இரத்தக்காட்டேரியை மையமாக வைத்து உருவாகியுள்ள கதையம்சம் கொண்ட திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறதாம். இதில் கதாநாயகனாக ஆயுஷ்மான் குர்ரானா நடித்து வரும் நிலையில் ஆதித்யா சர்போத்தர் இத்திரைப்படத்தை இயக்கி வருகிறார். இது ராஷ்மிகா மந்தனா நடிக்கும் முதல் ஹாரர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் 2025 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது.
