அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருபவர் தான் நடிகை ரஷ்மிகா மந்தனா. கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடித்துள்ளார்.
சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம், இந்திய அளவில் மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகிய படம் வசூலில் சக்கை போடு போட்டது. அந்த படத்தில் அய்யா சாமி, வாயா சாமி என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பேய் ஹிட் அடித்துள்ளது.
தற்போது தென்னிந்திய சினிமாவைத் தாண்டி தற்போது இந்தி படங்களிலும் தடம் பதிக்கத் தொடங்கி விட்டார். அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் ஆகிய படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிக்க உள்ள அனிமல் படத்தில் தான் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தில் அணில் கபூர், பாபி தியோல் ஆகியோரும் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர். இதில் ஹீரோயினாக பரினீதி சோப்ரா முதல் நடிக்க இருந்தார், அவர் வெளியேறிய நிலையில் தான் தற்போது ராஷ்மிகா ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
இதனிடையே முன்னதாக, விஜய்யின் தளபதி66ல் ராஷ்மிகாவை நடிக்க வைக்க, பேசப்பட்டது இந்த நிலையில் பாலிவுட் படத்தில் நடிப்பதற்காகத்தான் விஜய் படம் வேண்டாம் என ஒதுங்கியதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.