இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.
ஆம், இவர்கள் இவரும் சேர்ந்து 2018ம் ஆண்டில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ராஷ்மிகாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய துவங்கியது. தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து இந்தி திரைப்படத்திலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி சினிமா வட்டாரத்தையே அதிர வைத்துள்ளார். கடைசியாக நடித்த வாரிசு படத்திற்கு சுமார் ரூ 3 கோடி சம்பளமாக வாங்கிய ராஷ்மிகா மந்தனா, தற்போது பாலிவுட் ஹீரோ ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடிக்க ரூ 4 கோடி சம்பளம் வங்கியுள்ளாராம். அனிமல் திரைப்படம் ஹிட் அடித்துவிட்டால் மேலும் அவரது சம்பளம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதை கேட்டு பாலிவுட் நடிகைகளே ஆடிபோய்ட்டாங்களாம்.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.