வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!
Author: Selvan22 January 2025, 5:47 pm
சோகத்தில் ராஷ்மிகா மந்தனா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து பல இளைஞர்களை தன்னுடைய அழகால் சுண்டி இழுத்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த புஷ்பா-2 படம் தறிக்கட்டி ஓடி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
இதனையடுத்து அடுத்தடுத்த படங்களில் ராஷ்மிகா மும்மரமாக நடித்து வந்த நிலையில்,அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.இந்த தகவலை அவரே தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.
இதையும் படியுங்க: மதகதராஜா பார்ட்டியில் லூட்டி அடித்த விஷால்…குடித்து கும்மாளம் போட்ட பிரபலங்கள்..!
இந்த நிலையில் தற்போது விமான நிலையத்திற்கு காரில் வந்திறங்கிய அவர் தட்டு தடுமாறி ஒற்றை காலால் நொண்டி நொண்டி வீல் சேரில் உட்கார்ந்தார்.அதன் பின்பு அவரது பணியாளர்கள் அவரை வீல் சேரில் அழைத்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
GET WELL SOON mam 🧑🏻🦽🛐🙏🏻 #RashmikaMandanna @iamRashmika pic.twitter.com/p22ZFjKPmi
— David Bhai 🌼 ❌ 🔥 (@davidbhai003) January 22, 2025
மேலும் அவர் தன்னை யாரும் அடையாளம் காண கூடாது என்பதற்காக முகத்தில் மாஸ்க் மற்றும் தலையில் தொப்பி அணிந்தவாறு சென்றார்.இதனால் ரசிகர்கள் பலர் அவர் விரைவில் குணமாகி நடிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.