வீல் சேரில் ஆட்டம் போடும் ராஷ்மிகா…வைரலாகும் கியூட் வீடியோ.!
Author: Selvan22 February 2025, 1:04 pm
வீல் சேரில் லூட்டி அடித்த ராஷ்மிகா
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா,இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா-2 திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்,தற்போது ஹிந்தியில் இவருடைய நடிப்பில் உருவான ‘சாவா’ திரைபபடம் வெளியாகியுள்ளது,சில வாரங்களுக்கு முன்பு உடற்பயிற்சி செய்யும் போது காலில் முறிவு ஏற்பட்டது,அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு ஓய்வில் இருந்து வருகிறார்.
இதையும் படியுங்க: மனைவிக்கு துரோகம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ்.. நடிகையுடன் ரகசிய உறவு!
இந்த சூழலிலும் தன்னுடைய படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் வீல் சேர் மூலம் கலந்து கொண்டு வந்தார்,தற்போது ராஷ்மிகா சாவா திரைப்படத்தின் விழாவில் கலந்து கொண்ட வீடீயோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோவில் வீல் சேரில் அமர்ந்து கொண்டு வரும் போது,கார் ஓட்டுவது போல் கற்பனை செய்து வருவார்,இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனதையடுத்து,சிலர் கியூட் என்றும்,ஒரு சில ரசிகர்கள் ஓவர் ஆக்ட்டிங் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கடந்த 14 ஆம் தேதி இவருடைய நடிப்பில் வெளிவந்த ‘சாவா’ திரைப்படம் ரசிகர்களிடேயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.